கொரோனாவால் சுற்றுலாத் துறைக்கு பெரும் வருவாய் இழப்பு: அமைச்சர்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 கொரோனாவால் சுற்றுலாத் துறைக்கு பெரும் வருவாய் இழப்பு: அமைச்சர்

புதுடில்லி : கொரோனா வைரஸ் பாதிப்பால், சுற்றுலாத் துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அத்துறையின் அமைச்சர், பிரஹலாத் படேல், நேற்று நடந்த லோக்சபா கூட்டத்தில் கூறினார்.

கொரோனா பாதிப்புகளுக்கு நடுவே, பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நேற்று தொடங்கியது. அந்நிய செலாவணிஇதில், கொரோனா பாதிப்புகளால் சுற்றுலாத் துறையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த கேள்விக்கு, அத்துறையின் அமைச்சர், பிரஹலாத் படேல், எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு:கொரோனா பாதிப்பினால், சுற்றுலாத் துறையின் வருவாய் இழப்பு மற்றும் வேலை இழப்புகள் ஆகியவற்றை மதிப்பிட, முறையான ஆய்வுகள் தொடங்கப்படவில்லை. அதே நேரத்தில் இத்துறைக்கு அன்னிய செலாவணி உள்ளிட்ட பெரும் வருவாய் இழப்பு, மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துறையின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து, சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி தரப்பில், ஆக., 31 வரை செலுத்த வேண்டிய கடனுக்கு, கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.கடன்மத்திய அரசின் தற்சார்பு திட்டத்தின் கீழ், சுற்றுலாத்துறைக்கு, மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இதிலிருந்து, இத்துறையில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, உத்தரவாதமில்லா நான்காண்டு கால கடன் வழங்கப்படும். அதனை திரும்ப செலுத்த, மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X