பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டம் 16 நிமிடங்களில் நிறைவு

Updated : செப் 16, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபை கூட்டம், நேற்று துவங்கிய,16 நிமிடங்களில் நிறைவடைந்தது. கூட்டம்,இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம், ஐந்து மாத இடைவெளிக்கு பின், நேற்று துவங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. இருக்கைகளில் மாற்றம் தமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்த
சட்டசபை கூட்டம் 16 நிமிடங்களில் நிறைவு

சென்னை : தமிழக சட்டசபை கூட்டம், நேற்று துவங்கிய,16 நிமிடங்களில் நிறைவடைந்தது. கூட்டம்,இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.தமிழக சட்டசபை கூட்டம், ஐந்து மாத இடைவெளிக்கு பின், நேற்று துவங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி உள்ளது.


இருக்கைகளில் மாற்றம்



தமிழக சட்டசபை கூட்ட அரங்கில், சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்த முடியாது என்பதால், சென்னை கலைவாணர் அரங்கில், கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள, சட்டசபை கூட்ட அரங்கை போல், கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில், சட்டசபை கூட்ட அரங்கு அமைக்கப்பட்டது.
சட்டசபை அரங்கில் இருந்த, பாரம்பரியமிக்க சபாநாயகர் இருக்கை, கலைவாணர் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.சபாநாயகரின் வலது புறம் ஆளும் கட்சியினருக்கும், இடதுபுறம் எதிர்கட்சியினருக்கும், இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே, ௩ அடி இடைவெளி விடப்பட்டிருந்தது. இருக்கைக்கு முன்புறம் மேஜை அமைக்கப்பட்டு, அதில், 'மைக்' பொருத்தப்பட்டிருந்தது.
இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டதால், சிலருடைய இருக்கைகளில் மாற்றம் இருந்தது. சட்டசபை கூட்ட அரங்கில், முதல் வரிசையில் கடைசியாக இருந்த, கைத்தறித் துறை
அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இங்கு இரண்டாவது இருக்கையில், முதலாவதாக அமர்ந்திருந்தார்.


அனுமதி சீட்டு



கூட்ட அரங்கில், 'ஏசி' வசதியுடன், மின் விசிறிகளும் பொருத்தப்பட்டிருந்தன. எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு அருகில், பத்திரிகையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்ட அரங்குள்ள மூன்றாவது தளத்திற்கு, உரிய அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை, 9:15 மணியில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் வரத் துவங்கினர். காலை, 9:54 மணிக்கு, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகியோர் சபைக்கு வந்தனர். அவர்களை தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று வரவேற்றனர்.
காலை, 9:55க்கு துணை முதல்வர் பன்னீர்செல்வமும், 9:56 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்.,சும் சபைக்கு வந்தனர். முதல்வர் வந்தபோது, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி ஒலி எழுப்பினர்.


மவுன அஞ்சலி



காலை, 10:00 மணிக்கு, சபாநாயகர் தனபால் வந்ததும் கூட்டம் துவங்கியது. சபாநாயகர் திருக்குறள் கூறி, அதற்கான பொருள் கூறி முடித்ததும், அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, 'நீட்' தேர்வு காரணமாக இறந்தவர்களுக்கும், சபையில் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தினார். சபாநாயகர் பிறகு பேசுவோம் எனக்கூறி, இரங்கல் குறிப்புகள் வாசிக்க துவங்கினார்.
சபாநாயகர் அறிவிப்பின்படி, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், 23 பேருக்கு இரங்கல் தெரிவித்து, ௨ நிமிடங்கள், அனைவரும் எழுந்து நின்று, மவுன அஞ்சலி செலுத்தினர்.அதைத் தொடர்ந்து, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எம்.எல்.ஏ., அன்பழகன், எம்.பி., வசந்தகுமார், கொரோனா தொற்றால் இறந்தவர்கள் ஆகியோருக்கு, இரங்கல்தீர்மானம் வாசிக்கப்பட்டது. அதன்பின் அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.அத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. காலை, 10:16 மணிக்கு, சபையை ஒத்தி வைப்பதாகவும், மீண்டும் சபை, இன்று காலை, 10:00 மணிக்கு கூடும் என, சபாநாயகர் அறிவித்தார்.
இன்றும், நாளையும் சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது.


25 பேர், 'ஆப்சென்ட்'



சட்டசபை கூட்டத்திற்கு, நேற்று ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்,முன்னாள் அமைச்சர்களான, தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மைதீன்கான், மதிவாணன், சண்முகநாதன் மற்றும் தினகரன் உட்பட, 25 பேர் வரவில்லை. நியமன எம்.எல்.ஏ., நான்சியும் சபைக்கு வரவில்லை. மொத்த எம்.எல்.ஏ.,க்கள், 234 பேரில், மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. மீதமுள்ள, 231 எம்.எல்.ஏ.,க்களில், 206 பேர் மட்டும், சபைக்கு வந்திருந்தனர்.


சோதனைக்கு தி.மு.க., எதிர்ப்பு



* சட்டசபை கூட்ட அரங்கில் திறக்கப்பட்ட, தலைவர்களின் படங்கள், புதிதாக தயார் செய்யப்பட்டு, தற்காலிக கூட்ட அரங்கில், அதே வரிசையில் பொருத்தப்பட்டிருந்தன. அதேபோல, டிஜிட்டல் கடிகாரங்களும் பொருத்தப்பட்டிருந்தன
* தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட, எம்.எல்.ஏ., - கு.க.செல்வத்திற்கு, 228வது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. கூட்டம் துவங்கிய பின், அவர் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் அவரிடம் பேசவில்லை
* பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மஞ்சள் நிற சட்டை அணிந்து வந்திருந்தார்
* கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு, என் - 95 முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை, ஈரமான துடைப்பான்கள், முக தடுப்பான் ஆகியவை அடங்கிய, 'கோவிட் -- 19 தற்காப்பு பெட்டகம்' வழங்கப்பட்டது.
* பத்திரிகையாளர்கள் இரு பிரிவாக அமர வைக்கப்பட்டிருந்தனர். ஒரு வரிசையில், மேஜை வசதி இல்லாததால், செய்திகளை எழுத, பத்திரிகையாளர்கள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதாக, சட்டசபை செயலர் சீனிவாசன் உறுதி அளித்தார்
* சட்டசபைக்கு வந்த எம்.எல்.ஏ.,க்களை, போலீசார் மெட்டல் டிடெக்டர் வைத்து, சோதனை செய்ததற்கு, தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
* எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைக்கு மேலே, மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை, 'ஆப்' செய்யும்படி, சில எம்.எல்.ஏ.,க்கள் கூற, ஒரு வரிசையில் உள்ள, மின் விசிறிகள் அனைத்தும், ஒரே சுவிட்சில் இணைக்கப்பட்டிருந்தால், தனிப்பட்ட மின்விசிறியை நிறுத்த முடியாமல், சட்டசபை செயலக ஊழியர்கள் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202022:29:02 IST Report Abuse
kulandhai Kannan ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி செலவு. காலம் பொன் போன்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
15-செப்-202010:05:10 IST Report Abuse
ஆப்பு கலைவாணர் அரங்க சீரமைப்பு, சம்பளம் எல்லாம் தண்டம். இதை காணொலி மூலமாகவே செய்திருக்கலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-செப்-202004:48:00 IST Report Abuse
Mani . V எட்டு மணி நேரம் நடக்கும் சபையிலேயே ஒன்றும் செய்ய மாட்டார்கள். 16 நிமிடத்தில் என்ன செய்யப் போகிறார்கள்? இந்த 16 நிமிடத்துக்கா கோடிக்கணக்கில் செலவு செய்து அரங்கை அமைத்தார்கள்? எதிலும் கொள்ளை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X