பொது செய்தி

தமிழ்நாடு

காவல் துறையினர் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, தமிழக காவல் துறை மற்றும் சீருடை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், 131 பேருக்கு, 'அண்ணா பதக்கங்கள்' வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படை, தமிழ்நாடு விரல் ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறைகளில், சிறப்பாக பணியாற்றியோரை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும், அண்ணாதுரை பிறந்த நாளான, செப்டம்பர், 15ல், முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.மானிய தொகைஇந்த ஆண்டு, காவல் துறையில், முதல்நிலை காவலர் முதல், எஸ்.பி., வரை, 100 பேர்; தீயணைப்புத் துறையில், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குனர் வரை, 10 பேர்.

சிறைத் துறையில், முதல் நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரை, 10 பேர்; ஊர்க்காவல் படையில், ஐந்து பேர்; விரல் ரேகைப்பிரிவில் இரண்டு டி.எஸ்.பி.,க்கள்.தடய அறிவியல் துறை பிரிவில், இரண்டு அதிகாரிகள் ஆகியோருக்கு, 'முதல்வரின் அண்ணா பதக்கங்கள்' வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.பதக்கங்கள் பெறுகிறவர்களுக்கு, அவரவர் பதவிக்கேற்றவாறு, பதக்க விதிகளின்படி, வெண்கல பதக்கம் மற்றும் ஒட்டுமொத்த மானிய தொகையும் அளிக்கப்படும்.திருநெல்வேலி சேவியர் காலனியில் உள்ள, 70 அடி உயர மாநகராட்சி நீர் நிலை தொட்டி மீதிருந்து குதித்து, தற்கொலை செய்து கொள்ள முயன்ற கணேசன், 45, என்பவரை, பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ், முன்னணி தீயணைப்பு வீரர் செல்வம் ஆகியோர் காப்பாற்றினர்.

வெகுமதி : அவர்களுக்கு, முதல்அமைச்சரின் வீரதீர செயலுக்கான, தீயணைப்புத் துறை பதக்கம், தலா, 5 லட்சம் ரூபாய் பண வெகுமதி வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். பின்னர் நடக்கும் விழாவில், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டோருக்கு, முதல்வர் இ.பி.எஸ்., பதக்கங்களை வழங்குவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X