சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறையில் இருந்து வந்தவர் துாக்கிட்டு தற்கொலை

Added : செப் 14, 2020
Share
Advertisement

மதுராந்தகம்:சிறையில் இருந்து வீட்டுக்கு வந்த நபர், மதுராந்தகம் அருகே, தற்கொலை செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார், 36. இவர், சென்னையில் செயின் பறிப்பு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நிபந்தனை ஜாமினில், மூன்று நாட்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த, ஜமீன் எண்டத்துார் கிராமத்தில், தன் உறவினர் வீட்டுக்கு வந்த ராம்குமார், உறவினர்கள் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்த சித்தாமூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, ராம்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X