சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி:காஞ்சி,திருவள்ளூர்,செங்கல்பட்டு

Added : செப் 14, 2020
Share
Advertisement

2 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, கீவளூர் கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசார், அந்த பகுதியில், நேற்று முன்தினம் இரவு, ரோந்து சென்றனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றிதிரிந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தபோது, திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், 27, ராஜேஷ், 24, லோகேஷ், 26, விக்னேஷ், 23, என்பதும், இவர்கள் கஞ்சா விற்பதும் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்த, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணிடம் 'சில்மிஷம்' செய்தவர் கைது

செய்யூர்: செய்யூர் அடுத்த, நமந்தம் கிராமத்தைச் சேர்ந்தவர், காண்டீபன், 50. கூலித்தொழிலாளி.இவர், அதேப் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத, 32 வயதுடைய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து, அந்த பெண்ணின் தாயார் அளித்த புகாரின்படி, சித்தாமூர் போலீசார், காண்டீபனை கைது செய்தனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

செங்கல்பட்டு: சென்னை, குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் மனைவி அம்சவல்லி, 46. இவர், மறைமலை நகர், பேரமனுாரில் உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம், வந்தார். வீட்டிற்கு செல்வதற்காக, மறைமலை நகர் பஸ் நிலையத்திற்கு, நடந்து சென்றார். அப்போது, பின்னால்வந்த இரண்டு நபர்கள், அவரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, மூன்று சவரன் செயின் மற்றும் 5,000 ரூபாயை பறித்துச் சென்றனர். மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாலிபரை தாக்கிய இருவர் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பிரபு, 30. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் பிரகாஷ், 21, என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று, தெருவில் பிரபு நடந்து சென்ற போது, பிரகாஷ், அவரது சகோதரர் பிரசாத், 19, ஆகிய இருவரும் சேர்ந்து, பிரபுவை தாக்கினர். இது குறித்து, திருத்தணி போலீசில், பிரபு அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

தொழிற்சாலை முன் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், தனியார் இரும்பு உருக்கு மற்றும் மின் உற்பத்தி நிலையம் இயங்கி வருகிறது. அந்த தொழிற்சாலையில், வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர்உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி, ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில், நேற்று, தொழிற்சாலை முன், கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என, தொழிற்சாலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

நகை, பணம் திருட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி, கோட்டக்கரை பகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகரில் வசித்து வருபவர் அன்சாரி மனைவி சாபிரா பீ, 52. நேற்று பகல் நேரத்தில், வீட்டை வெளிபுறமாக தாழிட்டு, ரேஷன் கடைக்கு சென்று வீடு திரும்பினர்.இடைப்பட்ட, 30 நிமிட நேரத்தில், அவரது வீட்டின் கதவை திறந்து, மர்ம நபர்கள் உள்ளே சென்று, பீரோவில் வைத்திருந்த பதிமூன்றரை சவரன் நகை, 1,200 ரூபாய் பணத்தை திருடி சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X