தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் ஆட்களை கடத்தும் கும்பல் அதிகரிப்பு; மக்கள் அச்சம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

நம்புதாளை பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹா தெரு ராமர் 38. கொத்தனாரான இவருக்கு முத்துலட்சுமி 34, என்ற மனைவியும், ஹரிகரன் 11, அகிலேஷ் 9, ரேஷ்மா 7, ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். ராமர் 2019 அக்., இரவு 8:00 மணிக்கு கடைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை.எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில் முத்துலட்சுமி தொண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் 20 நாட்கள் கழித்து நவ.,2ல் வழக்கு பதிவுசெய்தனர்.

கணவரின் குடும்பத்தினர் யாரும் இல்லாத ஆதரவற்ற நிலையில் நுாறு நாள் வேலைக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வருகிறார் முத்துலட்சுமி.கணவரை கண்டுபிடித்து தருமாறு பத்துக்கும்மேற்பட்ட முறை முறையிட்டும் தொண்டி போலீசார் அலட்சியம் காட்டுகின்றனர். இதுகுறித்து முத்துலட்சுமி நேற்று கலெக்டர் வீரராகவ ராவிடம் மனு அளித்தார். குடும்பம் வறுமையில் வாடுவதால் தனது கணவரை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதே போல் கீழக்கரைகடற்கரையில் 2019 ஜனவரியில் இம்ரான்கான் என்ற வாலிபர் கொலை செய்து புதைக்கப்பட்டார்.மனைவி அவரை தேடி வந்த நிலையில் கீழக்கரையில் கடத்தப்பட்டார். அவரைப் பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை. தர்ஹா வலசையில் காணாமல் போன வாலிபர் குறித்தும் கண்டறியப்படவில்லை.

இதே போல் கடந்த ஓராண்டில் பத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனநிலையில் அவர்களைப்பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. ஆட்களை கடத்தும் கும்பல் ராமநாதபுரத்தில் அதிகரித்துள்ளனரோ, என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X