பொது செய்தி

தமிழ்நாடு

தெய்வச்சிலை நல்லுாரில் பூத்து குலுங்கும்300 ஆண்டு பழமையான ருத்திராட்ச மரம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே வெள்ளாமரிச்சுக்கட்டி ஊராட்சியில் உள்ளதெய்வச்சிலை நல்லுாரில் 300 ஆண்டு பழமையான ருத்திராட்ச மரத்தில் தற்போது பூக்கள் பூத்துள்ளது.

இங்குள்ள பூரண, புஷ்கலா சமேதஅய்யனார் கோயில்வளாகத்தில் அரியவகை ருத்திராட்ச மரம் உள்ளது.சிவலிங்க பூஜையில் பிரதான இடத்தை பிடிப்பது ருத்ராட்சமாகும். மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடிய ருத்ராட்ச மரம், உத்தரகோசமங்கை அருகே உள்ள தெய்வச்சிலை நல்லுாரில் வளர்ந்திருப்பது அரிய விஷயமாக கருதப்படுகிறது.

தெய்வச்சிலை நல்லுாரைச் சேர்ந்த விவசாயிபூமிநாதன் கூறியதாவது:300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அய்யனார்கோயில் வளாகத்தில்வளர்ந்து காணப்படுகிறது.ஆவணியில் பூத்து குலுங்கும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ருத்திராட்சக் காய்கள்கிடைக்கும். கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க வேலி அமைத்து,பராமரித்து வருகிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X