சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கிசான்' திட்டத்தில் முறைகேடு 2,712 பேர் ஈடுபட்டதாக தகவல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,712 பேர், பிரதம மந்திரி கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, முறையான விசாரணை நடத்தப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டோரிடம் இருந்து பணம் திரும்பப் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிரதம மந்திரி கிசான் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 42 ஆயிரத்து 382 பேர் அடங்கிய பட்டியல் அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலை சரிபார்த்தபோது காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,712 நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதில், மொத்தம், 78 லட்சம் ரூபாய் முறைகேடாக பெற்றனர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, முதல் கட்டமாக, 59 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, பிரதம மந்திரி கிசான் வங்கி கணக்கிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. மீத தொகையை வசூலிக்க உள்ளோம்.

மேலும், வேறு மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டோரின் வங்கி கணக்கில் இருந்து, நேரடியாகவே பணம் எடுத்து விடுகிறோம். தவிர, கிராம நிர்வாக அலுவலர்களை வைத்து, வீட்டிற்கே அனுப்பி வசூல் செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X