சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கையில் ஒரே நாளில், 364 பேருக்கு, கொரோனா

Added : செப் 14, 2020
Share
Advertisement

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், 364 பேருக்கு, கொரோனா தொற்று, நேற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 30 ஆயிரத்து 374 பேருக்கு, கொரோனா வைரஸ் உறுதி செய்யப் பட்டது. இதில், 28 ஆயிரத்து 221 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.இந்நிலையில், தாம்பரம் - 102, பல்லாவரம் - 95, செங்கல்பட்டு - 54, வண்டலுார் - 41, திருப்போரூர் - 38, திருக்கழுக்குன்றம் - 17, மதுராந்தகம் - 12, செய்யூர் - ஐந்து என, மொத்தம், 364 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர்.

மேலும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேர் என, மொத்த பாதிப்பு, 30 ஆயிரத்து, 743 ஆக உயர்ந்துள்ளது.சென்னை, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, கொரோனா நோயாளிகள், ஆறு பேர் நேற்று, இறந்தனர். இதுவரை, 487 பேர் இறந்துள்ளனர்.

திருவள்ளூரில் 302

திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம், 28 ஆயிரத்து, 318 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. நேற்று, 302 பேருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை, 28 ஆயிரத்து, 620ஆக உயர்ந்தது.இதுவரை, 26 ஆயிரத்து,92 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்; 485 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 2,043 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சியில் 84

காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதியதாக, 84 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.காஞ்சிபுரம் நகராட்சியில் - 11, குன்றத்துார் - 35, காஞ்சிபுரம் - 15, உத்திரமேரூர் - 12, வாலாஜாபாத் - ஆறு, ஸ்ரீபெரும்புதுார் - ஐந்து பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 18 ஆயிரத்து, 467 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X