பொது செய்தி

தமிழ்நாடு

சிவாலய பிரதோஷ வழிபாடு நேரலையில் கண்டு தரிசிக்கலாம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை:சென்னை நகரின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடு, இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஊரடங்கு காரணமாக, சென்னை புறநகரில் உள்ள வழிபாட்டு தலங்களில், 5 மாதங்களுக்கு பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்காததால், பிரதோஷ வழிபாடு, தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.அதன்படி, சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு, இன்று மாலை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை http://www.youtube.com/c/MYLAPORE KAPALEESWARARTEMPLE என்ற இணையதளத்தின் மூலம், இன்று மாலை, 4:30 மணிக்கு நந்தி அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில், https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற இணைய முகவரி மூலம், இன்று மாலை, 4:00 மணிக்கு, நந்தியம் பெருமான் அபிஷேகமும், அதை தொடர்ந்து, பிரதோஷ நாயகர் அபிஷேகமும், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருவேற்காடு வேதபுரிஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாட்டை, https://www.youtube.com/watch?v=Tkb9h27QkPw என்ற YouTube channel என்ற இணையதளம் மூலம், இன்று மாலை, 4:30 மணி முதல், நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X