சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷவாயு தாக்கி ஒருவர் பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, ஓட்டல் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த நபர், விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தார்.

பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி, 32; கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார்.குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கம், வழுதலம்பேடில் உள்ள தனியார் ஓட்டலில், நேற்று முன்தினம், கழிவுநீர் தொட்டியில் தேங்கிய கழிவுநீரை, வாகனம் மூலம் அகற்றினார்.

அப்போது, தொட்டிக்கு அடியில் உள்ள சகதியை அகற்ற, பழனியை உள்ளே இறக்கினர். தொட்டிக்குள் இறங்கி, கழிவுகளை அகற்றியபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு, பழனி மயங்கி விழுந்தார்.மேலே இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியவில்லை. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து, தொட்டிக்குள் மயங்கிய நிலையில் கிடந்த பழனியை துாக்கினர்.அதற்குள் பழனி பரிதாபமாக இறந்தார்.

அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, ஓட்டல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X