தமிழ்நாடு

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை முகாம் தொடக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

---ராமநாதபுரம் : ராமநாதபுரம் புதுத்தெருஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரை முகாமை கலெக்டர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் சார்பாக ஊட்டசத்து வார விழா போஷன் மா விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். கிராமப்புற செவிலியர்கள் களப்பணியில் ஈடுபட ஏதுவாக ஆக்சிஜன் அளவீட்டுகருவி மற்றும் உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவிகளை வழங்கினார். மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் ராமநாதபுரம் செந்தில்குமார், பரமக்குடி இந்திரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி பங்கேற்றனர்.

சிவகங்கை

சிவகங்கை நகர்நல மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது.கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் கலாதேவி வரவேற்றார்.மருத்துவ இணை இயக்குனர் இளங்கோ மகேஷ்வரன், துணை இயக்குனர் யோகவதி, சுகாதாரத்துறை மருத்துவர்கள் அரவிந்த் ஆதவன், பாலஅபிராமி, குழந்தை நல அலுவலர் ரெஜினா ராணி, நகராட்சி கமிஷனர் ராஜேஸ்வரன், பொறியாளர் சக்திவேல், சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், சுரேஷ் பங்கேற்றனர்.

கலெக்டர் பேசியதாவது:செப்.,ல் இருகட்டமாக1 முதல் 19 வயதிற்கு உட்பட்ட 4 லட்சத்து 4 ஆயிரத்து 135 குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதாரநிலையம், அங்கன்வாடிமையங்களில் இம்மாத்திரை வழங்கப்படும்.இதன் மூலம் குழந்தைகளின் சத்து குறைபாடு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இந்த வாய்ப்பை பெற்றோர் பயன்படுத்தி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X