போலீஸ் சோதனை சாவடி பராமரிப்பில்லாமல் பாழாகிறது

Added : செப் 14, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மரைன் போலீசார் சோதனை சாவடி, குடிமகன்கள் குடிக்கும் இடமாக மாறியதால் பெண்கள் அச்சம் அடைகின்றனர்.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வேர்க்கோட்டில்5 ஆண்டுக்கு முன்பு மரைன் போலீசாருக்கு சோதனை சாவடி கட்டடம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இங்கு 10க்கும் மேலான போலீசார் பணிபுரிந்து தனுஷ்கோடி, கரையூர், புலித்தேவன் நகர் சாலை வழியாக கடற்கரைக்கு போதை பொருட்கள் கடத்தும் வாகனத்தை தடுத்தும், இப்பகுதியில் தகராறு செய்யும் சமூக விரோதிகளை போலீசார் விரட்டினர்.

இச்சாவடியில் இருந்த போலீசாரை பிற பகுதிக்கு இடம் மாற்றியதால், கடந்த இரு ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் இரவில் குடிமகன்கள் இங்கு போதையில் பாட்டில்களை உடைத்தும், அசுத்தமாக்கி உள்ளனர்.சமூக விரோதிகளை அகற்றி, போதை பொருள் கடத்தலை தடுக்க துறைமுக போலீஸ் ஸ்டேஷனை, இக்கட்டத்திற்கு மாற்றிட எஸ்.பி.,கார்த்திக் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X