பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை பேரிடர் காலம்; மீட்பு பணிக்குழுவில் 3500 பேர்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:15 மண்டல அளவில் துணை கலெக்டர் நிலை அலுவலர் தலைமையில் 15 குழுக்கள், இதர துறை அலுவலர்கள் கொண்ட குழுக்களாக 135 குழுக்களில் 3500க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் உள்ளனர். வெள்ளம், புயலால் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 32 நிவாரண மையங்கள் உள்ளன. மீனவர்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கூற வேண்டும்.

16 மழை கணக்கீட்டு நிலையங்களின் மூலம் மழையளவு தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் பேரிடர் தொடர்பான புகார்களை 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் கூறலாம்,' என்றார். இக்கூட்டத்தில் கடலோர காவல் படை கமாண்டன்ட் ராஜநாகேந்திரன், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், டி.ஆர்.ஓ., சிவகாமி, சப்கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி ஆர்.டி.ஓ., தங்கவேல், கூடுதல் எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன் பங்கேற்றனர்.--

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X