சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டிகளிடம் செயின் பறிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

பேரூர்:இரு வெவ்வேறு சம்பவங்களில், மூதாட்டிகளிடம் செயின் பறித்த மர்ம நபர்களை, போலீசார் தேடுகின்றனர்.* பேரூர் அடுத்த இருட்டுப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள், 85; தோட்டத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில், தோட்டத்து வீட்டில் இருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர், சின்னம்மாளின் முகத்தில் தண்ணீரை தெளித்துள்ளார். பின்னர், முகத்தில் மிளகாய் பொடியை துாவி, அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்து தப்பினார்.
ஆலாந்துறை மாரிசெட்டி வீதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 65. இவர், கணவர் மற்றும் மகன், மருமகளுடன் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, வீட்டு கதவை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர், உறங்கி கொண்டிருந்த முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த, ஐந்து சவரன்செயினை பறித்து தப்பினார்.அடுத்தடுத்த நாட்களில், மூதாட்டிகளிடம்செயின் பறித்து தப்பிய மர்ம நபர்களை காருண்யா நகர், ஆலாந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X