பாழானது பரமக்குடி தீர்த்தக்குளம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் வாசுகி தீர்த்தக்குளம் பராமரிப்பின்றி கழிவுநீர், குப்பை சேர்ந்துள்ளன. இதற்கு எப்போது விமோசனம் கிடைக்குமோ என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி அருகே 12 கி.மீ., தொலைவில் உள்ளது நயினார்கோவில். இங்கு மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் பெற்ற சவுந்தர்யநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயில் உள்ளது.தொடர்ந்து ஆண்டு முழுவதும் இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வருகை புரிவர்.மேலும் சுற்றுவட்ட கிராமங்களில் விளைந்த விளைச்சலில் ஒரு பகுதியை இக்கோயிலில் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.இதே போல் குழந்தை வரம் வேண்டுவோர், அக்குழந்தையை கோயிலில் விட்டு ஏலம் எடுக்கும் முறை உள்ளது. இத்துடன் வருடம் முழுவதும் இங்கு முடிகாணிக்கை செலுத்த வருவோர் உட்பட பக்தர்கள் கோயில் எதிரில்உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம்.

ஆனால் சில ஆண்டுகளாகவே இக்குளத்தைச் சுற்றி குடியிருப்பவர்கள் கழிவுநீரை விடுவது, குப்பை கொட்டுவது என சுகாதாரமற்ற நிலைக்கு சென்றுள்ளது.இக்குளத்திற்கு வேலி அமைத்து, நடை பாதை அமைத்து பராமரிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தொடர்ந்து கூறி வரும் நிலையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக குளம் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி வருகிறது.ஆகவே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ள இக்குளத்தை சீர்செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X