வடவள்ளியில் ரோட்டுல ஓடுது அபார்ட்மென்ட் கழிவு!

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஆள் விழுங்கும் குழிமருதமலை ரோடு, நவாவூர் பிரிவில் இருந்து நவாவூர் செல்லும் சாலையில், 100 அடி தூரத்தில் இடது புறம் உள்ள ஆள்துளை கிணறு. வண்டி வாகனங்களுக்கு இடையூறாக இருக்கிறது.- சரண், நவாவூர்.

பாலத்தில் அலங்கோலம்நெம்பர் 4, வீரபாண்டி பிரிவில் உள்ள இந்தப் பாலத்திற்கு, சமீபத்தில்தான் பெயின்ட் அடித்து முடித்தார்கள். அதற்குள் அதன் மேல் போஸ்டர்களை ஒட்டி அசிங்கப்படுத்துகின்றனர்.- சேவியர், வீரபாண்டி.

வீணாப் போகுது தண்ணீர்வார்டு 56, ஹட்கோ காலனி பூங்கா எதிரில் ஆழ்துளை கிணறு தண்ணீர் குழாய் உடைந்து, வீதி முழுவதும் சகதியாய் உள்ளது.- சிவசங்கர், பீளமேடு.

சாலையில் ஓடுது சாக்கடைவடவள்ளி, மருதமலை ரோட்டில் உள்ள, 9 மாடி அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து, கழிவு நீரை இரவு நேரத்தில் குழாய் மூலம் சாலையில் திறந்து விடுகின்றனர்.- சிவ பார்த்திபன், வடவள்ளி.

வீணாகிறது தண்ணீர்வார்டு எண் 55, நேதாஜி ரோடு, பாலகிருஷ்ண கல்யாண மண்டபம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகப் போகிறது.- முத்துக்குமார், பழையூர்.

மின்சார சிக்கனம் தேவைகோவை, கணபதி, பி அண்டு டி காலனி பகுதியில், ஆசிரியர் காலனியில் பல தெரு விளக்குகள் பகல் 12 மணிக்கு கூட ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன.- தனசேகர், கணபதி.

கம்பம் விழுந்தா துன்பம்சங்கனுாரை அடுத்த நல்லாம்பாளையம் சாலையில் உள்ள மின் கம்பம், சிமென்ட் காரைகள் உதிர்ந்தும், கம்பிகள் துருப்பிடித்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.- சித்தார்த் சுவாமி, நல்லாம்பாளையம்.

ரோடுனு ஒண்ணு இருக்கா?நல்லாம்பாளையத்திலிருந்து, மாதா அமிர்தா பள்ளி வழியே செல்லும் ரோடு, முற்றிலும் தார் பெயர்ந்து, கற்சாலையாக கிடக்கிறது.- ராமமூர்த்தி, பொன்விழா நகர்.

கழிவு தேங்குது; புழுக்கள் வளருதுவெள்ளக்கிணர், உழைப்பாளர் வீதியில் சாக்கடை நீர் தேங்கி, புழுக்கள் உருவாகி உள்ளன. இங்கு கொசு மருந்து மற்றும் சாக்கடை நீரை சுத்தம் செய்ய, நடவடிக்கை எடுக்க வேண்டும்.-லட்சுமி, வெள்ளக்கிணர்.

தெரு விளக்கு எரியணும்கணபதி, டெக்ஸ்டூல் பகுதியில், அதிகாலை 5:00 மணிக்குள் தெருவிளக்குகள் அணைக்கப்படுகின்றன. இதனால், காலை 6:30 மணி வரை இருட்டில் தான், மக்கள் நடமாட வேண்டியுள்ளது.- பிரபு, கணபதி.

சிறுவாணியை இப்படி சிந்தலாமா?திருச்சி ரோடு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு அருகில் ரோட்டில் சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.-மங்கலீஸ்வரன், ராமநாதபுரம்.

வழி மறிச்சா வண்டி வருமா?புலியகுளம், பஜார் வீதியில், 70ம் வார்டில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 60 அடி சாலையாக இருந்த ரோடு, தற்போது 20 அடி சாலையாக மாறிவிட்டது. அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடிவதில்லை.-முத்து, புலியகுளம்.

யாருக்கு குழி வெட்றீங்க ஆபிசர்சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர்.ரோட்டில் தினமும், ஆயிரக்கணக்கில் வாகனங்கள் செல்கின்றன. இந்தியன் பேங்க் அருகே ரோடு சேதமடைந்து, போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது.- சுமதி, சாய்பாபா காலனி.

மண்பாதையில் ரோடுநீலிகோணம்பாளையம், அண்ணா நகர்- சக்கரைச்செட்டியார் நகர் இடையில் உள்ள ரோடு அமைக்கவில்லை. குப்பையை மண்பாதை எங்கும் வீசியுள்ளனர்.- மனோ, அண்ணாநகர்.

ஓடையில் நீந்தும் வாகனங்கள்சின்னவேடம்பட்டி ரோடு, சைதன்யா ஸ்கூல் எதிரில், மலர்விழி நகர் ரோடு, மழை பெய்தாலே, ஓடை நீரில் வாகனங்கள் செல்வது போல மிதக்க வேண்டி உள்ளது.- கீதா நாகராஜன், சின்னவேடம்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X