சமூக இடைவெளிகளை மீறும் வாகன ஓட்டிகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 சமூக இடைவெளிகளை மீறும் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி;இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள், சமூக இடைவெளியை மீறி வருகின்றனர். போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் உரிய, வாகன தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கொரோனா தளர்வுகள் அதிகரித்த போதும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் அவசியம் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கும்மிடிப்பூண்டி பகுதியில், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில், போக்குவரத்து விதிகளை மீறுவது மட்டுமின்றி சமூக இடைவெளியின்றி, அளவுக்கு அதிகமானோர் பயணித்து வருகின்றனர்.

அவர்களில், பெரும்பாலானோர் முக கவசம் அணிவது இல்லை. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர், உரிய வாகன தணிக்கை செய்து, ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை வாகன ஓட்டிகள் முறையாக பின்பற்ற போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X