பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க 25,000 குழந்தைகளுக்கு மாத்திரை

Added : செப் 14, 2020
Share
Advertisement

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25 ஆயிரம் குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.சுகாதாரத்துறை சார்பில், ஆண்டுதோறும் பிப்., மற்றும் செப்., மாதத்தில், 19 வயதிற்கு குறைவானவர்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.இந்தாண்டு, செப்., மாதத்திற்கான முகாம், நேற்று முதல் துவங்கியது. வரும், 28ம் தேதி வரை முகாம் நடக்க உள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரப்பகுதிகளில், வீதி வீதியாக சென்று, சுகாதாரத்துறையினர் குடற்புழு நீக்க, மாத்திரை வழங்கி வருகின்றனர்.தொண்டாமுத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கனகராணி கூறுகையில், "தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 23 இடங்களில் முகாம்கள் அமைத்து, 1 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று, மாணவர்களுக்கு வினியோகித்து வந்தோம்.ஊரடங்கு காரணமாக, நேரடியாக பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கி வருகிறோம். வரும், 28ம் தேதிக்குள், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 25,000 மாணவர்களுக்கு, குடல் புழு மாத்திரை வழங்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X