சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போன் திருட்டு :மூன்று பேர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

மேட்டுப்பாளையம்:காரமடை மாரியாபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 42. இவரும், இவரது அக்கா மகனும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். காலையில் எழுந்து பார்த்தபோது, அருகே வைத்திருந்த இரண்டு மொபைல் போன்களை காணவில்லை. காரமடை போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார்.வழக்கு பதிவு செய்த காரமடை போலீசார், மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையைச் சேர்ந்த, நூர் முகமது, 20, காரமடை மணி விலாஸ் வீதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ரகுநாத், 20, கேரள மாநிலம் சுல்தான் பத்தேரியை சேர்ந்த சிவக்குமார், 39 ஆகிய மூவரையும் கைது செய்து, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X