சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கொன்று தாய் தற்கொலை வழக்கில் கணவர், மாமியார் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

புழல்:குடும்ப பிரச்னையில், இளம்பெண் தன் குழந்தையை துாக்கிலிட்டு, தானும் தற்கொலை செய்த வழக்கில், அவரது கணவர் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.

புழல், காவாங்கரை, ஜீவா தெருவைச் சேர்ந்தவர், ரஞ்சித்குமார், 29; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பாக்கியலட்சுமி, 21. இவர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில், மித்ரன் என்ற ஆண் குழந்தை இருந்தது.தாய் வீட்டில் இருந்து, பணம் வாங்கி வரச்சொல்லி, பாக்கியலட்சுமியின் கணவரும், அவரது தாய் சாந்தியும், 47, கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால், கணவன் - மனைவி இடையே, தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி, 11ம் தேதி, தன் குழந்தையை துாக்கிலிட்டு கொன்று, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, புழல் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்தனர்.இதில், பாக்கியலட்சுமியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கில், தாயும், மகனும், நேற்று முன்தினம் இரவு, புழல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X