பொது செய்தி

தமிழ்நாடு

'கோரிக்கைகள் நிறைவேறாமல் ஆம்னி பஸ்கள் ஓடவே ஓடாது'

Added : செப் 14, 2020
Share
Advertisement
 'கோரிக்கைகள் நிறைவேறாமல்  ஆம்னி பஸ்கள் ஓடவே ஓடாது'

கோவை:''அரசு எங்கள் கோரிக்கைகளை, நிறைவேற்றும் வரை ஆம்னி பஸ்கள் ஓடாது,'' என, ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மார்ச், 23ம் தேதி முதல், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் போக்குவரத்துக்கு, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, பஸ்களை இயக்கப்போவதில்லை என, கோவை மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்க செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது:தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், போக்குவரத்து நிறுத்தப்பட்ட கடந்த ஆறு மாதங்களுக்கான வரி, இன்சூரன்ஸ் மற்றும் வங்கி கடன் வட்டியை தள்ளுபடி செய்ய கோரியுள்ளோம். அதற்கு அரசு தரப்பில் இதுவரை எந்த பதிலும் இல்லை.50 சதவீத பயணிகளை மட்டுமே, ஏற்றி செல்ல வேண்டும் என, கட்டுப்பாடு விதித்துள்ளனர். இது டீசல் செலவுக்கு கூட கட்டுப்படியாகாது. நீண்ட நாட்களுக்குப் பின், இப்போது ஒரு பஸ்சை ஓட்ட வேண்டும் என்றால், 1.5 லட்சம் ரூபாய் செலவு செய்யாமல்,வெளியில் எடுக்க முடியாது.அதனால் எங்கள் கோரிக்கைளை ஏற்று, சமூக இடைவெளிக்கான சரியான வழிகாட்டு விதிமுறைகளை வழங்கினால் மட்டுமே, ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X