சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை மீது சரமாரி தாக்கு: போதை ஆசாமிக்கு 'கம்பி!'

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஆவடி:ஆவடி அருகே, குழந்தை மயக்கம் அடையும் அளவிற்கு, மது போதையில் இரக்கமின்றி அடித்து காயப்படுத்தியவர், கைது செய்யப்பட்டார்.

சென்னை, புளியந்தோப்பு, 12வது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 25; மீன் வியாபாரி. இவர், தன், இரண்டரை வயது குழந்தை கோகுல் ராஜை, ஆவடி அடுத்த பட்டாபிராம், ராஜிவ் காந்தி நகரில் வசிக்கும், தன் சகோதரி பவானியிடம், சில நாட்கள் விட்டு வைத்திருந்தார்.

இந்த நிலையில், பவானியின் கணவர் அருண் குமாருக்கும், 22, பாக்கியலட்சுமிக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.அதற்கு பழிதீர்க்கும் விதமாக, தன் வீட்டில் இருந்த, குழந்தை கோகுல் ராஜை, சம்பவத்தன்று அருண்குமார், மது போதையில், தோசை கரண்டியால் சரமாரியாக அடித்து காயப்படுத்தினார்.பாதிக்கப்பட்ட குழந்தை, சுயநினைவை இழந்த நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறது.

இது குறித்து, பாக்கியலட்சுமி, நேற்று முன்தினம் இரவு, ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி, குழந்தையை தாக்கிய அருண்குமாரை, குழந்தைகள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஆவடி போலீசார், நேற்று மதியம், 12:30 மணி அளவில், கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X