இருட்டில் காரைக்குடி வீதி

Added : செப் 14, 2020
Share
Advertisement

காரைக்குடி : காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தால் பாழாகி போன சாலையை தொடர்ந்து இருளில் மிதக்கும் தெருக்களால் மக்கள் வெளியே செல்லவே அஞ்சுகின்றனர்.

காரைக்குடி நகராட்சியில் 4 ஆண்டுகளாக பாதாளசாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கழிவுநீர் சேகரிக்க 500க்கும் மேற்பட்ட ஆள்நுழைவு தொட்டிகள் அமைக்கும் பணியால், சாலைகள் முற்றிலும் சேதமடைந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.குறிப்பாக பெருமாள் கோயில், வடக்கு தெற்குவீதி, சி.மெ.வீதி, பழனியப்பச் செட்டியார் வீதி, சத்யாநகர், உழவர்சந்தை ரோடு, சுப்பிரமணியபுரம், டி.டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்படாததால், இருளில் மிதக்கிறது.

இரவு நேரங்களில் வெளியில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.முன்னாள் கவுன்சிலர் சுப்பு கூறுகையில், காரைக்குடி நகர் முழுவதுமே தெருவிளக்கு பிரச்னை உள்ளது. ஒருநாள் எரிகிறது. அடுத்து 10 நாட்களுக்கு எரிவதில்லை.புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. இரவினில் மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது.இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X