பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் திருத்தம் செய்வதற்காக ஆம்புலன்சில் வந்த ஆசிரியர்!

Added : செப் 14, 2020
Share
Advertisement
 ஆதார் திருத்தம் செய்வதற்காக ஆம்புலன்சில் வந்த ஆசிரியர்!

கோவை:ஓய்வூதியம் பெற முடியாமல் போனதால், கோவை கணுவாய் பகுதியை சேர்ந்த மூதாட்டி, ஆம்புலன்சில் கலெக்டர் ஆபீஸ் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜூலியா எலிசபெத், 60. விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த, நான்கு ஆண்டுகளாக நடக்க இயலாமல், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இவருக்கு வரவேண்டிய ஓய்வூதியம், சில மாதங்களாக வராமல் போனதாக கூறப்படுகிறது.
நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்க சென்றபோது, ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு, அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்காக, அவரது மகள் கவுண்டம்பாளையத்தில் உள்ள, இ-சேவை மையத்தில் நிலைமையை விளக்கியுள்ளார். சம்பந்தப்பட்ட நபர் கட்டாயம், நேரில் வர வேண்டும் என, அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், ஆதார் அட்டை அவசரமாக தேவைப்படுவதால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள, இ-சேவை மையத்துக்கு, ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டார். ஆதார் திருத்தம் வேண்டி ஆம்புலன்சில், வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X