பொது செய்தி

தமிழ்நாடு

வாடகை கார் உரிமையாளர்கள் கடன் கோரி கவர்னருக்கு கடிதம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : 'ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ளதால், வட்டி தள்ளுபடி, புதிய கடன் என, பல்வேறு சலுகைககள் வழங்க வேண்டும்' என, வாடகை வாகன உரிமையாளர்கள், தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

கடிதத்தில், அவர்கள் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர், வாடகை வாகனங்களை இயக்குகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், வங்கிகளில் கடன் பெற்று, வாகனங்களை வாங்கி உள்ளனர். புதிய கடன்கள்கொரோனா பரவலால், ஐந்து மாதங்களாக வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால், அவர்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். மத்திய அரசு அறிவித்த, வங்கிக் கடன் வசூலிப்பதற்கான காலக்கெடு, ஆகஸ்டில் முடிந்ததால், கடனைத் திருப்பி செலுத்த முடியாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

எனவே, வாழ்வாதாரம் இழந்துள்ள வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு, வங்கிகள் புதிய கடன்கள் வழங்க வேண்டும். இயக்கப்படாத நாட்களுக்கான வரியை தள்ளு படி செய்ய வேண்டும். ஓட்டுனர் உரிமம் உள்ள அனைவருக்கும், வேலை இழந்த நாட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.உரிய நடவடிக்கைவங்கிகள் கடனை, கூட்டுவட்டி இல்லாமல் வசூலிக்க, டிசம்பர் வரை விலக்களிக்க வேண்டும் என, பிரதமர், மத்திய நிதியமைச்சர், தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியும், எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனவே, எங்களின் வாழ்வாதார பிரச்னையான இதில், தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X