பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், வரும், ௨௫ம் தேதி, டில்லியில் நடக்கிறது.

தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இந்தக் குழுவினர், மாதம் ஒரு முறை ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடைசி கூட்டம், ஜூனில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதில், தமிழகம் சார்பில், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர், சென்னையில் இருந்தபடி பங்கேற்றனர்.

அதன்பின், இரண்டு மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை. மாத வாரியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரில், 10 டி.எம்.சி.,யை கர்நாடக அரசு நிலுவை வைத்து உள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், வரும், ௨௫ம் தேதி, டில்லியில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுபற்றிய தகவல், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநிலங்களின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, நேரில் பங்கேற்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. நேரில் பங்கேற்க முடியாதோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X