நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி., இழப்பீடு

Added : செப் 14, 2020
Share
Advertisement

புதுடில்லி : “மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., இழப்பீடு தொகையான, 1.51 லட்சம் கோடி ரூபாய், வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது,” என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவைகள் வரி குறித்த விபரங்களை வெளியிட்டு, நேற்று லோக்சபாவில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது: நடப்பு, 2020 - 2021 நிதியாண்டில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகை, ஒரு லட்சத்து, 51 ஆயிரத்து, 365 கோடி ரூபாய் ஆகும். இதில், மஹாராஷ்டிராவுக்கு, அதிகபட்சமாக, 22 ஆயிரத்து, 485 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவிற்கு, 13 ஆயிரத்து, 763 கோடி ரூபாய்; உத்தர பிரதேசத்திற்கு, 11 ஆயிரத்து, 742 கோடி ரூபாய்; குஜராத்திற்கு, 11 ஆயிரத்து, 563 கோடி ரூபாய், தமிழகத்திற்கு, 11 ஆயிரத்து, 269 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக உள்ளது.

நடப்பு நிதியாண்டில், மாநிலங்கள், 2.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, ஜி.எஸ்.டி., வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. இந்த பட்ஜெட்டில், ஜி.எஸ்.டி., வருவாய் இலக்காக, 6.9 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. எனினும், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை, மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி., வாயிலாக கிடைத்த வருவாய், 1.81 லட்சம் கோடி ரூபாயாகும். இது, பட்ஜெட் மதிப்பீட்டில், 26.2 சதவீதம் தான். இதற்கு, ஊரடங்கு கட்டுப்பாடுகளே முக்கிய காரணம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X