தமிழ்நாடு

தொழில் நிறுவனங்களில் உற்சாகம் எடுடா மேளம்... அடிடா தாளம்! டிசம்பருக்குள் 'கச்சேரி' களைகட்டும்!

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement
தொழில் நிறுவனங்களில் உற்சாகம் எடுடா மேளம்... அடிடா தாளம்! டிசம்பருக்குள் 'கச்சேரி' களைகட்டும்!

கோவை:கோவை தொழில் நிறுவனங்களில், உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியுள்ளது. டிசம்பருக்குள் உற்பத்தியில் மேலும் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கும் தொழில் துறையினர், வங்கி கடனை திரும்ப செலுத்துவதற்கான, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கு தளர்வுக்குப் பின் கோவை தொழில் நிறுவனங்களில், படிப்படியாக முன்னேற்றம் காணப்படுகிறது. ஆர்டர்கள் அதிகரிப்பதால், தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.உற்பத்தி 50 சதவீதம் உயர்வு!பொருட்கள் உற்பத்தி, 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மாவட்ட கலெக்டர் உத்தரவை பின்பற்றி, தொழில் நிறுவனங்களில் போதுமான நோய் தொற்று தடுப்பு முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இது, தொழிலாளர்கள் மத்தியில் நோய்த்தொற்று குறித்த தைரியத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.கட்டுமான பணிகள், இன்ஜினியரிங் தொழில்கள், ஜவுளித்தொழில் நிறுவனங்கள் படிப்படியாக செயல்பட துவங்கியுள்ளன. நம்பிக்கை தரும் வகையில் முன்னேற்றங்கள் இருப்பதால், வரும் டிசம்பருக்குள் இயல்பு நிலை துவங்கும் என, தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
சமீபத்திய தளர்வுகளுக்குப் பின், பஸ்களில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த பயணிகள் எண்ணிக்கை, இப்போது உயர்ந்து வருவது, இயல்பு நிலைக்கு வாழ, மக்கள் பழகி விட்டதையே உணர்த்துகிறது.மீள்கிறது கட்டுமானம்ஆட்கள் பற்றாக்குறை இருப்பினும், கட்டுமான தொழிலாளர்கள் பணிகளை துவங்கியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகள், மேல்நிலைத்தொட்டி அமைத்தல், கட்டடங்கள் கட்டுதல் போன்ற தொழில்கள், மெல்ல துவங்கி வேகம் பெற்றுள்ளன.தற்போது உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்தி, தொழில் நிறுவனங்கள் இயங்கத் துவங்கியுள்ளன.
ரயில்கள் இயங்கத் துவங்கி விட்டால், வெளி மாநில தொழிலாளர்கள் வேலை தேடி வரத்துவங்கி விடுவர். அதிகரிக்கும் உற்பத்திக்கு ஏற்ப, ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை இதனால் நிவர்த்தியாகி விடும்.ஆகவே, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, இன்னும் விரைவு பெற, ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதுதான், தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு.'கடன் தவணை காலம்நீட்டிக்க வேண்டும்'கொடிசியா தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், ''தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன. அதேசமயம், கடன் தவணைக்கான நீட்டிப்பு காலமும் முடிவடைகிறது.
தொழில்களை துவக்க, போதுமான நிதியை திரட்டும் நிலையில், தொழில் நிறுவனங்கள் கடனை செலுத்த வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது. ''அடுத்த ஆண்டு மார்ச் வரை, கடன் செலுத்தும் தவணையை நீட்டித்தால், விரைவான உற்பத்தியை துவக்க வசதியாக இருக்கும். ரயில்கள் ஓடத்தொடங்கினால், ஆட்கள் பற்றாக்குறை இருக்காது. மீண்டும் வட மாநில தொழிலாளர்கள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X