தமிழ்நாடு

புதுமையை புகுத்தும் பொறியாளர்கள்; இன்று தேசிய பொறியாளர் தினம்

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 புதுமையை புகுத்தும் பொறியாளர்கள்;  இன்று தேசிய பொறியாளர் தினம்

விருதுநகர் : எந்த ஒரு பணியிலும் பொறியாளர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. நம் தேசத்தின் புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரய்யா பிறந்த நாளான செப். 15 ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது

.இவர் நீர்தேக்கங்களில் தானியங்களை கொண்டு மதகு அமைப்பதில் திறன் பெற்றவர். குவாலியர், கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இவ்வகை மதகுகளை அமைத்துள்ளார். ஹைதராபாத் நகருக்கு வெள்ள பாதுகாப்பு முறைகள், விசாகபட்டின துறைமுகத்தை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் திட்டங்கள் ஆகியவை இவரது சாதனையாகும். அறிவியலை கொண்டு புதுமையான, அற்புதமான செயல்திட்டங்களை உருவாக்குவதே பொறியியல்.

நாம் தினசரி மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் பொறியாளர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பு உள்ளது. அவர்களையும், அவர்களது செயல்திட்டங்களையும் பாராட்டி போற்றுவோம்.


உற்றுநோக்குங்கள்


கணினி உலகத்தை கட்டமைப்பதிலும் மக்களின் தொடர்பு பணிகளை எளிமையாக்குவதுமே எங்கள் பணி. அதீத ஈர்ப்பும், ஒருமித்த கவனமுமே பொறியியல் துறையில் சாதிக்க முக்கிய துாண்டுகோல்கள் ஆகும்.

தற்போது கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் பணிகளை சீக்கிரமாக முடித்து அதிக நேரம் சேமிக்க முடிகிறது. பொறியியல் துறை மாணவர்கள் பரந்த பார்வையோடு வேலைவாய்ப்பை உற்றுநோக்குங்கள். நாம் காணும் பாலங்களும், மென்பொருள்களும், புதிய இயந்திரங்களும் தரமான பொறியாளர்களால் கட்டமைக்கப்பட்டது தான்.

- சாத்துாரப்பன், பொறியாளர், விருதுநகர்


சாத்தியமாகிறது பணிகள்

விஸ்வேஷ்வய்யா புனேயில் உருவாக்கிய நீர்தேக்கம் மிக சிறந்த ஒன்று. மாபெரும் மனிதருக்கு மரியாதை செலுத்தி அவரை பெருமைப்படுத்துவதில் இந்தியா பெருமை அடைகிறது. சிறந்த கட்டடங்கள், அணைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் பொறியாளர்களால்தான் சாத்தியமாகிறது. ரோடு அமைத்தல், பாலம் அமைத்தல், கட்டடங்கள் , கம்ப்யூட்டர் , எந்த துறையானாலும் அதில் பொறியாளர்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

பா.ஜெயபிரகாஷ், பொறியாளர், சிவகாசி


புதிய சிந்தனை உதயம்

இன்று நாம் பார்த்து பிரமிக்கும் ஒவ்வொன்றிலும் ஒரு இன்ஜினியர் இருக்கிறார். தற்போதைய கொரோனா கால கட்டத்தில் இளம் பொறியாளர்கள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து ஆக்கத்திறனை வளர்த்து கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் சிந்தனையில் நல்ல இலக்கியம் தோன்றும். அது போல் ஒரு பொறியாளரின் சிந்தனையில் புதுமையான கட்டமைப்புகள் இன்றைய நவீன காலத்திற்கேற்ப உதயமாகும். புதிய சிந்தனை, கடின உழைப்பு, கற்பனை வளம் ஒவ்வொரு பொறியாளரும் பெற்றிருக்க வேண்டும்.

-ஜான் சுரேஷ்குமார், பொறியாளர்ஜே.சி.அசோசியேட்ஸ், அருப்புக்கோட்டை


வேலைகளால் மனநிறைவுபொறியாளர் பணி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அமைகிறது. ஒவ்வொரு தனிமனிதனின் லட்சிய கனவான வீடு கட்டவேண்டும் என்பதை விருப்பபடி நிறைவேற்றும்போது அடையும் மகிழ்ச்சியே பொறியாளருக்கு கூடுதல் உற்சாகத்தை தரும். தரமான, நவீன மயமான வேலைகளால் மனநிறைவு பெறும் வாடிக்கையாளர்களால் நமக்கு தொடர்வேலைவாய்ப்பு பெற்று தருகிறது. தற்போதைய கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக பொறியாளர்கள் பாதிக்கபட்டிருந்தாலும் தற்போதைய தளர்வால் படிப்படியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

-மகேந்திரன், ஏ.ஏ.பில்டர்ஸ், ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
15-செப்-202010:36:04 IST Report Abuse
ganapati sb visvesvaraiya matrum poriyalargal pugaz onguga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X