ஆளும் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி ஜப்பான் பிரதமராகிறார் யோஷிஹைட் சுகா

Added : செப் 14, 2020
Share
Advertisement

டோக்கியோ : ஜப்பான் ஆளும் கட்சி தலைவர் தேர்தலில், யோஷிஹைட் சுகா வெற்றி பெற்றதை அடுத்து, அவர், அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

ஜப்பான் பிரதமர், ஷின்சோ அபே, உடல் நலக் குறைவு காரணமாக, பதவி விலகுவதாக, கடந்த மாத இறுதியில் அறிவித்தார். இதையடுத்து, நேற்று, டோக்கியோவில், ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைமை அமைச்சரவை செயலர், யோஷிஹைட் சுகா, 377 ஓட்டுக்கள் பெற்று, வெற்றி பெற்றார். இதர இரு போட்டியாளர்கள், 157 ஓட்டுக்கள் பெற்றனர்.சுகா, கட்சித் தலைவரானதைத் தொடர்ந்து, நாளை, ஜப்பான் பார்லி.,யில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், அவர் போட்டியிடுகிறார்.

பார்லி.,யில், ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், யோஷிஹைட் சுகா, பிரதமராக தேர்வாவது உறுதியாகியுள்ளது. விவசாயியின் மகனான, சுகா,71, ஷின்சோ அபேவின் வலது கரமாக செயல்பட்டு வருபவர். அரசு திட்டங்களை உன்னிப்பாக கவனித்து, அதிகாரிகளை விரட்டி, பணிகளை விரைவாக முடிப்பதில் வல்லவர்.ஜப்பானில் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டிற்கும், மக்களின் மொபைல் போன் செலவை கணிசமாக குறைக்கவும் துணை புரிந்தவர். அதிகம் வெளிநாடு களுக்குச் செல்லாத, சுகா, ''ஷின்சோ அபோயின் கொள்கைகளை பின்பற்றி, அரசை வழி நடத்துவேன்,'' என, தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுடன், கிழக்கு சீன கடலில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை சமாளிப்பது, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது ஆகியவை, சுகாவிற்கு சவாலாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X