பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு இணையவழி யோகா

Added : செப் 14, 2020
Share
Advertisement

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா கல்விக்குழுமம் மற்றும் ஈஷா அமைப்பு சார்பில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு இணையவழி யோகா பயிற்சி நடந்தது.

இதில், நுரையீரல் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும் யோகாசனங்களை யோகக் கலை நிபுணர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் செய்து காட்டினர். அழகப்பா கல்விக்குழும தலைவர் டாக்டர். ராமநாதன் வைரவன் யோகாவின் சிறப்பு குறித்து பேசினார்.தொடர்ந்து பேசிய அழகப்பா கல்விக்குழுமஅறங்காவலர் தேவி அலமேலு வைரவன் மாணவர்களின் நலன் கருதி, இணையவழி நிகழ்வுகளை அழகப்பா கல்விக்குழுமம் தொடர்ந்து வழங்கும் என்றார்.நிகழ்ச்சியில், சென்னை, காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்வி நிலையங்களின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X