அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட் தேர்வு பற்றி பேசுவதற்கு தி.மு.க.,வுக்கு உரிமையில்லை' ; அமைச்சர் விஜயபாஸ்கர்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 'நீட் தேர்வு பற்றி பேசுவதற்கு  தி.மு.க.,வுக்கு உரிமையில்லை' ; அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : ''காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சியில் விதைக்கப்பட்ட, 'நீட்' தேர்வு பற்றி பேசுவதற்கு, தி.மு.க.,வுக்கு தார்மீக உரிமையில்லை,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்துாரிபா காந்தி அரசு மருத்துவமனையில், குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். அதன்பின், அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி:குடற்புழுக்கள் நீக்கி, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை, குடற்புழு நீக்க மாத்திரை தடுக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சுறுசுறுப்பு, நினைவாற்றல், அறிவுத்திறன், உடல் வளர்ச்சி மேம்படுகிறது.

எனவே, ஒன்று முதல், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, மாத்திரை அவசியம் கொடுக்க வேண்டும்.மத்தியில், 2010ல், காங்கிரஸ் - தி.மு.க., ஆட்சியில் தான், நீட் தேர்வு விதைக்கப் பட்டது. எனவே, நீட் தேர்வு பற்றி பேச, இரண்டு கட்சிகளுக்கும் தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை. ஆனால், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்களையும், மாணவர்களையும் குழப்பி, திசை திருப்புகின்றன. தும்பை விட்டுவிட்டு, வாலை பிடிக்கிற செயலை, தி.மு.க., செய்கிறது. கொரோனா விதிமீறல்களை மீறும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதத்தை அதிகப் படுத்தி, சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

அந்த சட்டத்தின்படி, கொரோனா விதிமுறைகளை மீறிய நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, 13.39 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X