சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 மாதங்களில் ரூ.15 கோடி பொருட்கள் விமான நிலையத்தில் பறிமுதல்

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை விமான நிலையத்தில், ஆறு மாதங்களில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விபரங்கள், ஊரடங்கால் நாடே முடங்கிருந்தாலும், கடத்தல் வழக்கம் போல நடந்ததையே காட்டுகின்றன.


போதை பொருட்கள்

கொரோனா ஊரடங்கால், சரக்கு மற்றும் சிறப்பு விமானங்கள் தவிர்த்து, மார்ச், 24 முதல், உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. சில கட்டுப்பாடு களுடன், மே, 25 முதல், உள்நாட்டு விமான சேவைகள் இயங்கி வருகின்றன. தற்போது, வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை, 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், சிறப்பு விமானங்களை இயக்கி, மத்திய அரசு மீட்டு வருகிறது. இவ்வாறு, இயக்கப்படும்

சிறப்பு விமானங்கள் மற்றும், சரக்கு விமான சேவைகளை பயன்படுத்தி, சிலர் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.போதை பொருட்கள், தங்கம், வெளிநாட்டு பணம், ஹவாலா பணம், செம்மரக்கட்டைகள் என, அனைத்து வித கடத்தல்களும் ஜோராக நடக்கின்றன. இதற்காக கடத்தல் ஆசாமிகள், சரக்கு விமானங்களை பெருமளவு பயன்படுத்தி வருகின்றனர்.கொரோனா பாதிப்பால், மருத்துவ பொருட்களை உடனடியாக டெலிவரி செய்ய, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மருந்து பொருட்கள் என்ற பெயரில், போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன.

அதைபோல, தங்கம் கடத்த, வெளிநாடுகளில் இருந்து வரும், வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


ரூ.15 கோடி பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில், மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதங்களில், மொத்தம், 26 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட, 33 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து, 15 கோடி ரூபாய் மதிப்பிலான, கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், பெல்ஜியம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து, சென்னைக்கு, 9.28 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதை மாத்திரைகள், மருந்துகள் பறிமுதலுடன், கடத்தலில் முதலிடத்தில் உள்ளது.

துபாய், குவைத், ஷார்ஜா, அபுதாபி, சவுதி அரேபியா நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட, 3.39 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, 1.75 கோடி ரூபாய் ஹவாலா பணமும், மலேஷியாவிற்கு கடத்த முன்ற, 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.ஊரடங்கால், நாடே முடங்கியுள்ள நிலையிலும், சென்னை விமான நிலையத்தில், கடத்தல் சம்பவங்கள் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல, அரங்கேறி வருவது, அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X