பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை பருவத்தை நினைவூட்டும் மரக்குதிரை

Added : செப் 14, 2020
Share
Advertisement
  குழந்தை பருவத்தை நினைவூட்டும் மரக்குதிரை

அருப்புக்கோட்டைமரக்குதிரை, நடை வண்டி, அன்னப்பறவை வண்டி என்றாலே அது நமது சிறிய வயதை நினைவுப்படுத்தும். 50 ஐ கடந்தவர்களுக்கு மரத்தில் செய்யப்பட்ட குதிரை வண்டியில் விளையாடிய அனுபவம் ஞாபகத்திற்கு வரும்.

அக்காலத்தில் குழந்தை பிறந்த உடன் பார்க்க வரும் உறவினர்கள் குதிரை வண்டி, அன்னப் பறவை வண்டி, கை வண்டி என பரிசாக கொடுப்பர். குழந்தை நடக்க ஆரம்பிக்க துவங்கியவுடன் நடை வண்டியில் நடை பயிலும். பின்னர் குதிரை வண்டியில் ஏறி ஆடத் துவங்கும். காலம் மாற நவீன உலகில் இவை மறைந்து விட்டன.

மிடுக்கான நடைக்கு நடை வண்டி பயிற்சிநல்லது. மர குதிரையில் குழந்தைகள் விளையாடுவதால் இதயம் பலப்படும். மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். நவீன உலகில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது. விலை குறைவாக இருப்பதால் லாபமும் அதிகம் இல்லாததால் இத்தொழிலில் உள்ளவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர்.

ஆனால் இன்றும் அருப்புக்கோட்டை பாலவநத்தம் அருகில் உள்ள மெட்டுக்குண்டு கிராமத்தை சேர்ந்த 52 வயதான ராமர் மரக்குதிரைகள், அன்னப்பறவை, யானை போன்றவைகளை தேக்கு மரத்தில் செய்து தருகிறார். சிறுவயதிலிருந்து விடாமல் இந்த தொழிலை செய்து வரும் இவர் குழந்தைகள் விளையாடு வதற்கு ஏற்றவாறு நீடித்து உழைக்கும் வகையில் குதிரை வண்டிகளை செய்து தருகிறார்.

இதுதவிர, கோயில்களுக்கு யானை, மயில், அன்னம் சப்பரம் செய்து தருகிறார். மறையும் நிலையில் இருக்கும் இத் தொழிலை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்பது இவரின் வேண்டுகோளாக உள்ளது. தொடர்புக்கு 63694 14035.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X