பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில், 400 பேருக்கு கறவை மாடுகளும், 5,873 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான, வரும், 24ல் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

நடப்பாண்டிற்காக கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள்வழங்கும் பணி, கொரோனா தொற்று காரணமாக இம்மாதம் துவங்கப் படுகிறது.இது குறித்து, கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாவட்டத்தில், 2020 -21ல், எட்டு ஊராட்சிகளில், 400 பேருக்கு கறவை மாடுகளும், 14 ஒன்றியத்தில், மொத்தம், 5,873 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது.

கறவை மாடுகள் நவம்பர் - ஜனவரி மாதம் வரையும், விலையில்லா ஆடுகள், நவம்பர் - பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படும்.இதற்காக பயனாளிகளை தேர்வு செய்வதற்கு, சிறப்பு கிராம சபை கூட்டம், இம்மாதம், 24ம் தேதி மற்றும், 25ம் தேதி நடக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X