சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போயே போச்சு மனிதாபிமானம்; முதியவர்களை தவிக்க விட்ட கண்டக்டர்

Added : செப் 14, 2020
Share
Advertisement
போயே போச்சு மனிதாபிமானம்; முதியவர்களை தவிக்க விட்ட கண்டக்டர்

காரியாபட்டி : 500 ரூபாய் நோட்டை தவறவிட்ட பயணியை மனிதாபிமானம் இல்லாமல் இடையில் இறக்கி விட்டு சென்ற அரசு பஸ் கண்டக்டரின் நடவடிக்கை பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியது.

காரியாபட்டி அடுத்த கல்குறிச்சியை சேர்ந்தவர்கள் சங்கரகுமார் 75, சங்கரன் 74. அருப்புக்கோட்டையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற அரசு பஸ்சில் ( டி.என். 67 என் 1087 ) கல்குறிச்சியில் நேற்று காலை 11:10மணிக்கு ஏறினர். கூட்டமாக இருந்ததால் படியில் நின்று வந்தனர். தோணுகால் பிரிவு ரோட்டில் வந்தபோது டிக்கெட் எடுக்க பாக்கெட்டில் இருந்த ரூபாயை சங்கர குமார் எடுத்தார்.

500 ரூபாய் நோட்டு தவறி கீழே விழுந்தது. உடனே சப்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். 50 மீட்டர் துாரத்தில் பஸ் நின்றது. இதை எடுத்து வருவதற்குள் இருவரையும் நடுவழியில் இறக்கி விட்டு பஸ் சென்றுவிட்டது. செய்வது அறியாது திகைத்த முதியவர்களை அவ்வழியாக வந்த சமூக ஆர்வலர் காரில் ஏற்றி காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டார்.

பயணிகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டிய அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் முதியவர்கள்.அருப்புக்கோட்டை அரசு பஸ் டெப்போ மேலாளர் சீனிவாசன்: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X