சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்சிற்கு காத்திருப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொன்னேரி:பச்சிளம் குழந்தைகளுக்கான இலவச ஆம்புலன்ஸ் வசதிக்காக, பெற்றோர் பல மணி நேரம் காத்திருந்து தவிக்கின்றனர்.

பொன்னேரி அரசு மருத்துவமனையில், ஒரு மாதத்திற்கு, 100 - 120 மகப்பேறுகளும், மீஞ்சூர், காட்டூர், தேவம்பட்டு, பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 100க்கும் மேற்பட்ட மகப்பேறுகளும் நடைபெறுகிறது.பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு திடீரென ஏற்படும் மூச்சு திணறல், சுவாச கோளாறு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்கு, சென்னை குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

பச்சிளம் குழந்தைகளுக்கு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ், மாவட்ட மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், அவசர சிகிச்சை தேவைப்படும் பச்சிளம் குழந்தைகள் ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைப்பதில்லை.ஆம்புலன்ஸ் வசதிக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஒரு சில நாட்களில், நாள் முழுதும் பெற்றோர் காத்திருக்கின்றனர்.இன்குபேட்டர், ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள்தேவைப்படுவதால், தனியார் வாகனங்களிலும்,பச்சிளம் குழந்தைகளை கொண்டு செல்ல முடிவதில்லை.இதனால், பச்சிளம் குழந்தைகள் உடனடியாக அவசர சிகிச்சைக்காக, சென்னைக்கு கொண்டு செல்ல முடியாமல் பெற்றோர் பரிதவிக்கின்றனர். பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பை தவிர்க்க, பொன்னேரி பகுதிக்கு தனியாக அவசர ஊர்தி ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X