பொது செய்தி

தமிழ்நாடு

லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொன்னேரி:வாடகையை உயர்த்தி தரக்கோரி நிலக்கரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கப்பல்கள் மூலம், எண்ணுார் துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, கன்வேயர் பெல்ட் மூலம், மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு பகுதியில் உள்ள, செட்டிநாடு நிலக்கரி சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்படுகிறது.அங்கிருந்து, தினமும், 500க்கும் மேற்பட்ட லாரிகளில் கும்மிடிப்பூண்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகளுக்கு, 500க்கும் மேற்பட்ட லாரிகளில் நிலக்கரி அனுப்பப்படுகிறது.

நிலக்கரி ஏற்றிச் செல்லும் தனியார் டிப்பர் லாரி உரிமையாளர்கள் , வாடகை உயர்வை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.டீசல் விலை, சுங்கக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு நிதிச் சுமைகளால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால், தங்களது பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X