சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.நகர் பெட்ரோல் 'பங்க்'கில் திடீர் தீ

Added : செப் 14, 2020
Share
Advertisement

பாண்டி பஜார்:தி.நகர் பெட்ரோல், 'பங்க்'கில் ஏற்பட்ட தீ விபத்தில், இருவர் காயம் அடைந்தனர்.

சென்னை, தி.நகர், தியாகராயர் சாலையில், சிந்தாமணி கூட்டுறவு பெட்ரோல், 'பங்க்' இயங்கி வருகிறது.இங்கு, ஐந்து நாட்களாக, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பாக, புதிதாக பெட்ரோல் டேங்க் அமைக்கும் பணி நடக்கிறது.'விநாயகா பிளம்பிங் ஒர்க்' நிறுவனத்தைச் சேர்ந்த, ஒப்பந்த ஊழியர்கள், வெல்டிங் பணிகளை மேற்கொண்டனர்.

இதில், திருவான்மியூரைச் சேர்ந்த குமார், 45, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சேகர், 34, மற்றும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகியோர், நேற்று மாலை, பெட்ரோல் டேங்கை வெல்டிங் செய்து கொண்டிருந்தனர்.அப்போது, மின் கசிவு ஏற்பட்டு, 'டேங்க்' பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், குமார், சேகர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த தி.நகர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்ததுடன், அசம்பாவிதங்கள் ஏற்படாமல், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து, பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X