பொது செய்தி

தமிழ்நாடு

புதிய முறையில் சம்பளம் வழங்குவதில் தாமதம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் புதிய முறையில் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஆக., 2020 முதல் அரசு ஊழியர்களின் ஊதியம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு முறையில் வழங்க நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் ஊதியப்பட்டியல் தயாரிக்கும் மென்பொருள் விப்ரோ என்ற தனியார் நிறுவனத்தினரிடம் வழங்கப்பட்டது.விப்ரோ நிறுவனம் தயாரித்த மென்பொருளில் பல்வேறு குறைபாடுகளும், முரண்பாடு உள்ள காரணத்தினால் அனைத்து நிலையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.

தற்போதுள்ள புதிய முறையில், பழைய இ-பேரோல் முறையை காட்டிலும் தாமதமாக பட்டியல் அனுமதி வழங்குகின்றனர். அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் கிடைக்க பெறவில்லை. சார்நிலை கருவூலகத்தினை கண்டித்து போராட்டம் நடத்த சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளதாக அதன் ஒன்றியத்தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X