பொது செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் முதலுதவி பெட்டி; இளைஞர்கள் புதிய முயற்சி

Added : செப் 14, 2020
Share
Advertisement

காரைக்குடி : காரைக்குடியில் விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளித்திடும் வகையில், இளைஞர்கள்சிலர் முக்கிய இடங்களில் முதலுதவி பெட்டி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்குடியில் பாதாளசாக்கடை திட்டத்தால் சாலைகள் படுமோசமாக கிடக்கிறது. மோசமான சாலையால் தினமும் பல விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவதில்லை.விபத்தில் சிக்குபவர்களுக்கு முதலுதவி அளித்திடும் நோக்கத்தோடு, தோள்கொடு தோழா மற்றும் வள்ளல் அழகப்பர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் காரைக்குடியில் 30 இடங்களில் முதலுதவி பெட்டி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடக்கமாக, காரைக்குடியில் முக்கியபகுதிகளில், சாலை மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி முதலுதவி பெட்டிகளை வைத்தனர். இவர்களின் செயலை போலீசார் உட்பட பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X