பொது செய்தி

தமிழ்நாடு

2021 சட்டசபை தேர்தலுக்கு சென்னை செல்லும் ஓட்டு பெட்டிகள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சிவகங்கை : 2021 சட்டசபை தேர்தலில் பயன்படுத்த நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்த 940 கண்ட்ரோல், பேலட் யூனிட் ஓட்டு பெட்டிகள் சிவகங்கை நகராட்சியில் இறக்கப்பட்டது.

மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சிகள்,12 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த தலா 470 கண்ட்ரோல் யூனிட், 470 பேலட் யூனிட் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்படைத்திருந்தனர்.நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்நடைபெறவில்லை. இதனால், அங்கு பயன்படுத்தாமல் வைத்துள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வரும் 2021 சட்டசபை தேர்தலில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.

அதற்காக அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களை சென்னைக்கு அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி நகராட்சி, பேரூராட்சிகளில் இருந்த அனைத்து ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களும், நேற்று சிவகங்கை நகராட்சியில் இறக்கி வைக்கப்பட்டது. இவை சென்னைக்கு எடுத்து செல்ல உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X