பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் தனியார் பஸ்கள் இயக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சிவகங்கை : சிவகங்கையில் இயக்கப்படாமல் இருந்த தனியார் பஸ்கள் (செப்., 14)நேற்று முதல் இயக்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. செப்., 7 முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ் உரிமையாளர்கள் பஸ் ஓடாத காலத்தில் வாகனத்திற்கான சாலை வரி, காப்பீடு போன்ற தொகைகளை செலுத்துவதில் விலக்கு அளிக்க கோரி பஸ்களை இயக்காமல் நிறுத்தம் செய்திருந்தனர்.இந் நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திடம் அரசு பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் ஏற்பட்ட சமரசம் காரணமாக சிவகங்கையில் தனியார் பஸ்கள் நேற்று முதல் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கதலைவர் நாச்சியப்பன் தெரிவித்ததாவது:மாநில சங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம், புதுக்கோட்டை உட்பட மற்ற மாவட்டங்களில் இயக்கப்பட்டுஉள்ளது. அரசு வழிகாட்டுதல் படி சிவகங்கை மாவட்டத்தில் செப்.,16 முதல் தனியார் பஸ்கள் முழுமையாக இயக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X