கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பெயர் சூட்ட கேட்ட மனு தள்ளுபடி

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : சென்னை உயர் நீதிமன்றத்தில், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த, கலைஞர் தமிழ் பேரவையின் மாநில செயலர், பி.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:ஆலந்துார் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, அண்ணாதுரை; சென்ட்ரல் மெட்ரோவுக்கு, எம்.ஜி.ஆர்., - கோயம்பேடு மெட்ரோ வுக்கு, ஜெயலலிதா பெயரை, தமிழக முதல்வர் அறிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டம் வர, முன்னாள் முதல்வர் கருணாநிதி காரணமாக இருந்தார். மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு, மறைந்த முதல்வர்களின் பெயர்களை வைக்கும் போது, இந்த திட்டத்துக்கு காரணமானவரை மறந்து விடக்கூடாது.எனவே, டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையத்துக்கு, கருணாநிதியின் பெயரை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. டி.எம்.எஸ்., மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பெயர் சூட்டுவது குறித்து, அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நிலா - மதுரை,இந்தியா
15-செப்-202009:57:06 IST Report Abuse
நிலா திமுக ஆட்சி வந்தால்( வராது )அப்போது மாற்றுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X