பொது செய்தி

தமிழ்நாடு

சமையல் காஸ் சிலிண்டர் பணம் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

சென்னை : சமையல் காஸ் சிலிண்டருக்கான பணத்தை, டிஜிட்டல் முறையில் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டரை விற்கின்றன. அந்நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 2.38 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.அவர்களுக்கு, எண்ணெய் நிறுவனங்கள், காஸ் ஏஜென்சி ஊழியர்கள் வாயிலாக சிலிண்டர் வினியோகம் செய்கின்றன. அதற்கான பணத்தை, ஊழியர்களிடம் பலரும் ரொக்கமாகவே தருகின்றனர். இதனால், சிலிண்டர் விலையுடன், கூடுதல் பணம் பெறுகின்றனர்.

இதை தடுக்க, சிலிண்டர் பதிவு செய்யும் போதே, எண்ணெய் நிறுவனங்களின் இணையதளம், மொபைல் செயலிகளில், சிலிண்டருக்கான பணத்தை, டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். மேலும், ஊழியர்களிடம் கொடுத்து அனுப்பப்படும், கையடக்க,'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'கிரெடிட், டெபிட்' கார்டுகளை, 'ஸ்வைப்' செய்வது உள்ளிட்ட, டிஜிட்டல் முறையிலும் செலுத்தலாம்.தொற்று பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ரொக்கத்தை தவிர்த்து, டிஜிட்டல் வாயிலாக பணம் செலுத்துமாறு, வாடிக்கையாளரை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தின.

இதையடுத்து, ஊரடங்கிற்கு முன் வரை, மொத்த வாடிக்கையாளர்களில், 5.5 சதவீதமாக இருந்த டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை, தற்போது, 12.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சிலிண்டர் பதிவு மற்றும் பணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த, கூடுதல் வசதிகள்ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மார்ச்சிற்கு முன்னர், 10 லட்சம் பேர் வரை, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்திய நிலையில், தற்போது, 30 லட்சமாக அதிகரித்துள்ளது. அனைவரும், டிஜிட்டல் முறையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X