சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

பதில் சொல்வாரா ஸ்டாலின்?

Added : செப் 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
  பக்க வாத்தியம்

பதில் சொல்வாரா ஸ்டாலின்?

கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., செயற்குழு கூட்டம், கிணத்துக்கடவில் சமீபத்தில் நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் முருகன், நிருபர்களிடம் கூறுகையில், 'ஏற்கனவே, தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் உள்ளது. அந்த வாய்ப்பை, அரசு பள்ளிகளுக்கும் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டால், தி.மு.க., அதை எதிர்க்கிறது. அரசு பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வாய்ப்பை தடுக்கும், நவீன தீண்டாமையை ஸ்டாலின் துாண்டுகிறார்' என்றார். அங்கிருந்த நிருபர், 'தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி சொல்லிக் கொடுக்குறாங்க... அரசு பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கக் கூடாதான்னு, இப்போ மக்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க...' என்றார்.அருகிலிருந்த இளம் நிருபர், 'எல்லாத்துக்கும் அறிக்கை விடுற ஸ்டாலின், இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டேங்கிறாரே...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-செப்-202006:20:28 IST Report Abuse
D.Ambujavalli அதுமட்டுமில்லை தங்கள் குடும்பம், தங்கள் பள்ளிகள் சம்பந்தப்பட்ட கேள்விகள் என்றாலே ஜகா வாங்கிவிடுவாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X