சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தூங்கிய சிங்கத்துக்கு 'பில்டப்'

Added : செப் 14, 2020
Share
Advertisement
 

 அக்கம் பக்கம்

துாங்கிய சிங்கத்துக்கு 'பில்டப்'

'அரசியல் கட்சிக்கு தலைவராக இருப்பவர், 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டாமா... இப்படி மந்தமாக செயல்பட்டால், மற்ற கட்சியினர் நம்மை கிண்டலடிக்க மாட்டார்களா' என, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் நடவடிக்கைகளை பார்த்து, அவரது கட்சியினர் பொறுமுகின்றனர்.உத்தர பிரதேசத்தில் கடந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து, அகிலேஷ் யாதவ், இன்னும் மீளவில்லை.ஆளும் கட்சியான, பா.ஜ.,வையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சிக்கும் அளவுக்கு கூட, அகிலேஷ் விமர்சிப்பது இல்லை. இதனால், சமாஜ்வாதி நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்தனர்.
வரும், 2022ல், உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இப்போது தான் துாக்கத்திலிருந்து எழுந்தவர் போல், சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அகிலேஷ். கட்சியை சமூக வலைதளங்களில் முன்னிலைப்படுத்தும் விதமாக, 'சைக்கிள் டிவி' என்ற, 'யுடியூப்' சேனலை சமீபத்தில் துவக்கினார். சோர்ந்து போயிருந்த சமாஜ்வாதி கட்சியினர், இதைப் பார்த்து, 'சிங்கம் களமிறங்கிடுச்சு' என, ஆர்ப்பரித்தனர். பா.ஜ.,வினரோ, 'ஆறு ஆண்டுகளுக்கு முன்பே, எங்கள் கட்சி சார்பில், யுடியூப் சேனல் துவங்கி விட்டோம். நீங்கள் ரொம்பவே லேட். வேட்டையாடும் நேரத்தில் அயர்ந்து துாங்கிய சிங்கத்துக்கு, இவ்வளவு, 'பில்டப்' தேவை தானா' என, கிண்டலடிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X