பொது செய்தி

தமிழ்நாடு

அழகப்பா பல்கலை இறுதி ஆண்டு மாதிரி தேர்வில் முடங்கிய சர்வர்; மாணவர்கள் பாதிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

பரமக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலையில் நேற்று இறுதி ஆண்டு மாதிரி தேர்வின்போது சர்வர் முடங்கியதால் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.

காரைக்குடி அழகப்பாபல்கலை அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்காக நேற்று மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடந்தது. நேற்றைய மாதிரி தேர்வில் 15 முதல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரேநேரத்தில் ஆன்லைனில் வந்ததால் சர்வர் முடங்கியது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.காலை 9:00 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 2:00 மணி வரை நீடித்தது. சர்வர் முடங்கியதால் யாரும் கவலையடைய வேண்டாம் என்றும், இறுதி தேர்வு நேரத்தில் இதுபோன்ற சிக்கல் வராமல் இணைய வேகம் அதிகப்படுத்தும் என அழகப்பா நிர்வாகம் வாட்ஸ் ஆப்களில் குறுந்தகவல்கள் மூலம் தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X