பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டம்

Added : செப் 14, 2020
Share

சின்னமனுார் : பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேவை வாரம் கொண்டாட பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சின்னமனுாரில் பா.ஜ., மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.மாநில பட்டியலின தலைவர் பொன்பால கணபதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன், விவசாய அணித்தலைவர் சிங்கராஜ், செயலாளர்கள் மலைச்சாமி, செந்தில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செப்., 17 முதல் செப் 22 வரை சேவை வாரமாக கொண்டாடுவது, 2021 சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சின்னமனுார் நகர தலைவர் லோகேந்திரராஜன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X